Thursday, August 23, 2007

காயத்ரி மந்திரம்




காயத்ரி மந்திரம் - டாக்டர் எஸ்.பி.பாலு*

பிரார்த்தனை: திரு.ப்ரகாஷ் சாஸ்த்ரி
*பிராணாயம் மற்றும் முன்னுரை: திரு.ஏ.கே.சுந்தர்
*ஆவணம் (ஸ்துதி - ஸ்லோகம் 1 & 2)
*காயத்ரி மந்திரம் - 108 முறை
காயத்ரி ஆரத்தி - ராமு குழுவினர்
வர்ணனை மற்றும் பாடாலாசிரியர்: திரு.பாரதி கனேஷ்
தயாரிப்பு: யுனிக்யு ரிக்கார்டிங்

"காயத்ரி" எனும் மகா மந்திரம் நான்கு வேதங்களின் ஆதியாகவும் வேத வேதாந்தங்களின் தாயாகாவும் நிறைந்த பூரணமாய் பரிணமித்திருப்பது.

"காயத்ரி தியாணம்", பிராணாயமத்தோடு இணைத்தே ஞானிகள் வகுத்திருப்பதால் இதன் பாராயணம் தெளிந்த எளிய மூச்சுப்பயிற்ச்சிக்கு உகந்ததாக அமைகிறது. இதணை 108 முறை அல்லது 1008 முறை ஓதி உணர்வதால் சூரியனைப் போன்ற ஞான தேஜஸ் ஆத்மாவுள் நிறைந்து பூரண பரப்பிரும்மத்தின் ஐக்கிய பாவம் உண்டாகிறது. காயத்ரி பிரார்த்னைமனைதயும், உடலையும், ஆத்மாவையும் ஒரே நேர் கோட்டில் இணைந்து. நித்தியமான சந்தியை சாஸ்வதமாய் வழங்குகிறது.

ஓம் சாந்தி!!, ஒம் சாந்தி!!, ஓம் சாந்தி!!


The Gayatri Mantra:

Om Bhur Bhuvah, Svah;
Tat Savitur varenyam bhargo
devasya dhimahi;
Dhiyo yo nah. prachodayat. Om.

The album begins witha prayer after which follow the Prnayam mantra (used for breath control) which opens up our inner most being to receive the power of the sun. Om, chanted tree tiems to welcome this divine power. Followed by Gayatri Mantra chanted 108 times (one rosary of mala). The album ends with an aarthi, thus fulfilling the three stages of bhakti or devotion - visualization. meditation and prayer.

Oh, creater of the universe! We meditate upon thy supreme spiendour. May thy radiant power illuminate our intellects, destroy our sins, and guide us in the right direction!.

Commentry & Aarthi writen by: Sri. S.Bharathi Ganesh.


Get this widget | Share | Track details



காயத்ரி மந்திரம் - 2


Get this widget | Share | Track details

சரணம் பண்பாடுவோம்



ஹைதராபாத் திருமதி. உஷா அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க ஓர் அழகான ஐயப்பன் பக்திப்பாடல். கேட்டு மகிழுங்கள்.

வரம் தரும் ஐயப்பா
பாடல்: சரணம் பண்பாடுவோம்
பாடியவர்: எஸ்.பி.பாலு
இசை: வழுவூர் ஆர்.மாணிக்கவிநாயகம்
பாடல்கள்: கவிஞர் கல்பனா தாசன்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

கலகம் இல்லாத
உலகம் ஒன்றாக
சகலம் அவனே
என்றாடுவோம்

கலகம் இல்லாத
உலகம் ஒன்றாக
சகலம் அவனே
என்றாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

பம்பை நீராடுவோம்
பைந்தமிழில் பாடம்
நாம் கூறுவோம்

கண்கள் நீராடுவோம்
அவன் கருணை நதியில்
நாம் நீந்துவோம்

பம்பை நீராடுவோம்
பைந்தமிழில் பாடம்
நாம் கூறுவோம்

கண்கள் நீராடுவோம்
அவன் கருணை நதியில்
நாம் நீந்துவோம்

இறைவன் என்றாலும்
இயற்க்கை என்றாலும்
ஒருவன் அவனே என்றாடுவோம்

இறைவன் என்றாலும்
இயற்க்கை என்றாலும்
ஒருவன் அவனே என்றாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சபரி நாம் செல்லுவோம்
சந்நிதியில் அபயம்
நாம் சொல்லுவோம்

அழகன் புகழ் என்னுவோம்
ஹரிசுதனின் அருளே
சதம் என்போம்

சபரி நாம் செல்லுவோம்
சந்நிதியில் அபயம்
நாம் சொல்லுவோம்

அழகன் புகழ் என்னுவோம்
ஹரிசுதனின் அருளே
சதம் என்போம்

ஹரியே என்றாலும்
ஹரனே என்றாலும்
இருவர் மகனை
கொண்டாடுவோம்

ஹரியே என்றாலும்
ஹரனே என்றாலும்
இருவர் மகனை
கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

கலகம் இல்லாத
உலகம் ஒன்றாக
சகலம் அவனே
என்றாடுவோம்

கலகம் இல்லாத
உலகம் ஒன்றாக
சகலம் அவனே
என்றாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

சரணம் பண்பாடுவோம்
ஐயப்பன் அவன்
விரதம் கொண்டாடுவோம்

Thursday, August 16, 2007

பாலசுப்ரமணியம் பாட்டு



அற்புதமான தபேலா தாளத்துடன் பாலு அவர்கள் பாடும் இந்த பாடல் அவர் பெயரிலேயே அழகான பல்லவியில் தொடங்கும் பாடல். இந்த பக்திப்பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் என்று எனக்கு தெரியாது. கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பாடலை கேட்டு அனுபவியுங்கள்.

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
கோடி மனம் பாராட்ட கேட்டு
குரலால் இசை கொழிக்க
சொட்டும் கவிதை சுனையில் பொங்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

எந்த ஊரும் எந்த நாடும் சென்று
சந்ததோடு சிந்து தேனாய் இனிக்க
பந்த பாசம் என்று தேடும் பக்தர்
கொண்ட நேசம் உலகம் எங்கும் ஒலிக்கும்

கந்தன் வீட்டு பந்தம் எல்லாம் ஜொலிக்கும்
தொண்டர் கூட்டம் தோன்றி அங்கே அளிக்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

எந்த தாளம் எந்த ராகம் சேரும்
அந்த பாடல் பரிசு வாங்கி தீரும்

தங்கத்தேரில் வந்து உலாவும் தென்றல் நீ
சங்கத்தமிழில் சாறு நிறைந்த பொங்கல்

பழைய பக்தி மலையில் கொடியும் பறக்கும்
செழிக்கும் வாழ்வு சேர்ந்து செல்வம் சிறக்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

எந்த வேடம் எந்த கோலம் ஏற்கும்
அந்த கோலம் குமர வடிவில் போற்றும்
உந்தன் மலையில் வந்து பாடும் பேரு
கந்தன் பாடல் உந்தன் நாவில் சுவைக்கும்

பொங்கும் அமுதம் புதையல் போல மதிக்கும்
எங்கும் நிகழும் எழிழை போற்றி துவக்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
குரலால் இசை கொழிக்க
சொட்டும் கவிதை சுனையில் பொங்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

Get this widget | Share | Track details

Tuesday, August 7, 2007

ஸ்ரீ வெங்கேடேசா ஆஆ..ஆஆ



சென்ற வாரம் ஸ்ரீவெங்கடேச பெருமாளை தரிசிக்க திருமலைக்கு குடும்பத்துடன் சென்று திருப்தியாக தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இருளான கருவறையில் ஒளிமங்களாக எழுந்தருளியிருந்த அந்த பிரமாண்ட பெருமாளை சிலகணநிமிடத்தில் கண்டாலும். இந்த பதிவு ஏற்றும்வரை அந்த காட்சி இன்னும் என்மனதில் விட்டு மறையவில்லை. இரண்டு நாளாகியும் இன்னும் திருமலையில் இருக்கும் உணர்வே ஏற்படுகிறது. அந்த உணர்வுடன் நம் பாலுஜி அவர்கள் குழுவினருடன் பாடிய பாடல் இது. ரசிகர்களுக்கு பாலாஜியின் அருள் கிடைக்கட்டும் என வேண்டி குழுவினருடன் அவர் பாடிய இந்த பாடலை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பாடல்:ஸ்ரீவெங்கடேசனே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு, குழுவினர்
இசை:அரவிந்த் ஸ்ரீராம்
பாடலாசிரியர்:ஸ்ரீனிவாஸ் தாஸ்
ஆல்பம்: துளசி தீர்த்தம்
வெளியீடு:ஸ்வரவாணி ஆடியோஸ்
போட்டோ உபயம்: www.hindugallery.com நன்றி


ஸ்ரீ வெங்கேடேசா ஆஆ..ஆஆ
ஸ்ரீ ஸ்ரீனிவாசா நீ திருமலையில்
நான் வருவேனே ஏஏ..ஏஏஏஏ

முக்கண்னன் தலைவனே கோவிந்தா..
மூவுலகம் காப்பவனே ..கோவிந்தா..
கலி நீக்கும் கண்ணனே ..கோவிந்தா..
கார்முகில் வண்ணனே ...கோவிந்தா..
அபிஷேக மூர்த்தியே ..கோவிந்தா..
அவதார புருஷனே ..கோவிந்தா..
பற்றற்ற நாயகா ..கோவிந்தா..
குற்றங்கள் கலைந்திடும் ..கோவிந்தா..
நாதத்தின் தலைவனே ....கோவிந்தா..
தனியாத தெய்வமே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..

வென்கருட கொடியோனே.. கோவிந்தா..
திருத்தமலை திருமார்ப்பா.. கோவிந்தா..
ஆயிரம் பெயரோனே.. கோவிந்தா..
ஆதியங்கம் நீயே.. கோவிந்தா..
உண்மையின் உருவமே.. கோவிந்தா..
உயர் ஞான தேவனே.. கோவிந்தா..
கண்கவரும் கன்னியரே.. கோவிந்தா..
வேண்டியதை தந்தருளும்.. கோவிந்தா..
தாமரை கண்னனே.. கோவிந்தா.
நான்வரை நாயகனே.. கோவிந்தா.
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..

தீர்த்தமலை கண்ணனே..கோவிந்தா..
எங்கள் மணிவன்னனே....கோவிந்தா.
புவியாளும் பெருமானே ..கோவிந்தா.
பூமகள் நாயகா ..கோவிந்தா.
வரமளிக்கும் வள்ளளே..கோவிந்தா.
வேதமே ஞானமே..கோவிந்தா.
மும்மூர்த்தி மூவனே..கோவிந்தா.
பரப்ரம்ம தத்துவமே..கோவிந்தா.
ஸ்ரீவெங்கடேசனே..கோவிந்தா.
ஸ்ரீ ஸ்ரீனிவாசனே..கோவிந்தா.
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரிவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..

பாரெல்லாம் காத்தருளும்..கோவிந்தா..
பேரழகின் அருள் உருவே..கோவிந்தா..
காண்பதிலே கருணையனே..கோவிந்தா..
வேண்டுவென தந்தருளும்..கோவிந்தா..
மன்மதனின் மன்னவனே..கோவிந்தா..
என்னியது எழுந்தருளும் ..கோவிந்தா..
நல்லழகு பெருமானே..கோவிந்தா..
எல்லாமும் அறிந்தவனே..கோவிந்தா..
கருணயெனும் திருகடலே..கோவிந்தா..
திருவிழியால் குறை தீர்க்கும்..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..
கோவிந்த.. கோவிந்த ..கோவிந்தா..
ஸ்ரீவெங்கடேசனே ..கோவிந்தா..

ஸ்ரீவெங்கடநாதனே கோவிந்தா..
திருப்பதி வெங்கடசலாபதியே கோவிந்தா..
கலியுக வரதனேஏஏஏஏ கோவிந்தா..

ஏழுமலை வாசனே வெங்கடரமணா
கோவிந்தா.. கோவிந்தா.. கோவிந்தா.

Get this widget | Share | Track details

Friday, August 3, 2007

யார் மனத்தில் நீ




பாலு சார் பாடி எவ்வளவோ சினிமா பாடல்கள் நமக்கு இரவில் அமைதியான தூக்கத்தை தந்துள்ளன. இதோ ஒரு பக்திப்பாடல் ஆயர் பாடி மாளிகை போல் ஓர் அமைதியான கண்ணன் பாடல். இதை கேளூங்கள் நீங்கள் அன்று வேலை செய்த கலைப்பெல்லாம் நிமிடத்தில் பறந்து உங்களூக்கு நிம்மதியை தரும். குறிப்பாக இந்த வரிகள்..
//எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் ம்ம்ம்ம்ம்ம்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
இன்று எனக்குள் உன் நினைப்பை ஏந்தி நிற்கின்றாய்
என்னை ஏன் அழைக்கின்றாய்//

மேலும்...
//நீயும் நானும் வேறு வேறா ஆஆஆஆ
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீ பிரிந்தும் உள்ளே வழங்கும் சேருவாய் கன்னா
பதில் கூறுவாய் கண்ணா//
உங்கள் அலைபாயும் மன அமைதிற்க்கு உறுதியாக உத்திரவாதம் தரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்

யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்
யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்

யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

யார் விழிக்குள் நீ நிறைந்து வண்ணம் சேர்க்கின்றாய் ஆஆ
யார் விழிக்குள் நீ நிறைந்து வண்ணம் சேர்க்கின்றாய்

யார் மொழிக்குள் கையணைந்து என்னைக்கேட்கின்றாய்
என்னைக்கேட்கின்றாய்

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

யார் புனைந்த மாலைக்காக தோளசைக்கின்றாய்
யார் விழித்த குழல் முடிக்க போர் நடத்துகின்றாய்
யார் புனைந்த மாலைக்காக தோளசைக்கின்றாய்
யார் விழித்த குழல் முடிக்க போர் நடத்துகின்றாய்

எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் ம்ம்ம்ம்ம்ம்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
எங்கிருந்தோ தாஞ்ச சன்யம் நீ முழக்குகின்றாய்
இன்று எனக்குள் உன் நினைப்பை ஏந்தி நிற்கின்றாய்
என்னை ஏன் அழைக்கின்றாய்

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

நீ நடத்தும் நாடகத்தில் நான் நடிக்கின்றேன்
நீ இயக்கும் கருவியாக வரத்துடிக்கின்றேன்

நீ நடத்தும் நாடகத்தில் நான் நடிக்கின்றேன்
நீ இயக்கும் கருவியாக வரத்துடிக்கின்றேன்

நீயும் நானும் வேறு வேறா ஆஆஆஆ
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீயும் நானும் வேறு வேறா கூறுவாய் கன்னா
நீ பிரிந்தும் உள்ளே வழங்கும் சேருவாய் கன்னா
பதில் கூறுவாய் கண்ணா

யார் மனத்தில் நீ இருந்து மெய் சிலிர்க்கின்றாய்
யார் உயிர்க்குள் நீ நுழைந்து குழலிசைக்கின்றாய்

ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம்


Get this widget | Share | Track details

சிற்பக் கலை வளம் திகழும்




மீனாட்சி அம்மன் மீது ஒரு அருமையான பக்தி பாடல். கேட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.


சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே வைகை கரையிலே
கோவில் கொண்ட மீணாட்சியே தாயே
நம் மலை அரசன் செய்த தவப்பயனால்
அவன் மகளாகவே வாழ்ந்த மீனாட்சியே
தாயே
சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே..

அகந்தைக்குள் சமணரை பார்த்தாலே
ஞான சம்பந்தர் வென்றது மதுரையிலே
சுகம் தரும் தமிழ் மூன்றும்
தமிழ் சங்கம் தந்தது நீ வாழும் பதியிலே

அகந்தைக்குள் சமணரை பார்த்தாலே
ஞான சம்பந்தர் வென்றது மதுரையிலே
சுகம் தரும் தமிழ் மூன்றும்
தமிழ் சங்கம் தந்தது நீ வாழும் பதியிலே

சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே

கயல்விழி உன்னைகண்டு சொக்கநாதர்
திருமனம் புரிய வைப்பது உந்தன் அழகல்லவா
வாழ்வில் கவலைகள் தீர்ந்து நலம் காணவே
உன் கருணை ஒன்றே சிறந்த மருந்து அல்லவா

கயல்விழி உன்னைகண்டு சொக்கநாதர்
திருமனம் புரிய வைப்பது உந்தன் அழகல்லவா
வாழ்வில் கவலைகள் தீர்ந்து நலம் காணவே
உன் கருணை ஒன்றே சிறந்த மருந்து அல்லவா

சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே வைகை கரையிலே
கோவில் கொண்ட மீணாட்சியே தாயே
நம் மலை அரசன் செய்த தவப்பயனால்
அவன் மகளாகவே வாழ்ந்த மீனாட்சியே
தாயேஏஏ

சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே வைகை கரையிலே

கோவில் கொண்ட மீணாட்சியே...

Get this widget | Share | Track details

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்