Monday, March 10, 2008

காலை வேளையில் காற்றில்




இது ஒரு சினிமா படப்பாடல் தான் “ஓம்” என்ற படம். படத்தை நான் பார்க்கவில்லை. இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மனதிற்க்கு ஓர்வித அமைதி ஏற்படும் என்பது நிச்சயம்.

Get this widget | Track details | eSnips Social DNA


ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஒ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ

காலை வேலையில் காற்றில் கேட்பது ஸ்ரீஓங்காரமே
கண்கள் மூடும் மனசுக்குள் கேட்பது ஸ்ரீஓங்காரமே
காயத்ரி மந்திரம்.. உள்ளிருந்து ஓதும்
ப்ரம்மம் தான் வேதம்.. நாளூம் பாடும் நாதம்
மனம் வாக்கினிலே என்றும் தூய்மைக் கொண்டு
தினம் வாழ்ந்து வந்தால்.. சுகம் கோடி உண்டு

காலை வேலையில் காற்றில் கேட்பது ஸ்ரீஓங்காரமே

ஹ்ஹோஓஓஓஒ மனமே
உன்நினைவில் உன்னை நீ வந்தால்
உலகை வென்றிட முடியும்
அன்பென்று உன் வாக்கும் வேண்டுமே
அத்வைதம் அடங்க வேண்டுமே
உயிரெல்லாம் ஒன்று என்றால் கூடம் ஏது
அன்பே தான் கூலி தந்தை தான் வானம்
அன்பே தான் க்டவுள் ஆஹாஆஆஆஆ
அன்பே தான் சமயம்
ஐம்பூதமெல்லாம் கோலம் என்றால்
நம் வாழ்க்கையிலே ஒரு துன்பமில்லை

காலை வேலையில் காற்றில் கேட்பது ஸ்ரீஓங்காரமே

ம் ஹோஓஓஓ நமஹ

அறிவென்ற ஒளி தந்து அரசாளும் குருவே நமஹ
பேரண்டம் என்ற ஆழியில்
துணைபோக நாமும் தோன்றினோம்
தேகங்கள் போய்விடுமா நல்வாழ்வா வாழும்
கடமை தான் கடவுள்
கர்மம் தான் பூஜை
அன்பு ஒன்றே தர்மம்
ஆனந்தம் மோட்சம்

நம் வாழ்க்கை எல்லாம் அவன் தந்த வரம்
ஆவன் பாதை செய்வோம் அந்த மோட்சம் வரும்

காலை வேலையில் காற்றில் கேட்பது ஸ்ரீஓங்காரமே

Thursday, March 6, 2008

மஹாசிவராத்திரி



இன்று மஹாசிவராத்திரியில் பங்கு பெறும் அனைத்து ஆன்மீக உள்ளங்களூக்கு எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுள் வழங்கட்டும்.

வெள்ளிங்கிரி மலைசாரலில் இயங்கிவரும் ஈஷா யோக மயம் இன்று மஹாசிவரத்திரி விழாவை விமர்சியாக கொண்ட்டாடப்படுகிறது. நிகழ்ச்சியில் பத்மபூஷன். பாலமுரளி கிருஷ்னா, மாண்ட்லின் சீனிவாசன், சங்கர் மஹாதேவன் மற்றும் சிவமணி ஆகியோரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் பல உள்ளன. தாங்களூம் பங்குபெறுங்கள். இதோ விளம்பர சுட்டி.

http://www.ishafoundation.org/eflyers/Mahashivarathri_2008.html


பாலுஜியின் குரலில் இன்று சிவ சிவ மந்திரத்தை உபயோகித்து வாழ்வில் எல்லாவளம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள். -- கோவை ரவீ

ஓம் நமச்சிவாயா

Get this widget | Share | Track details


1. ஸ்ரீஷைல மல்லேசா.. 2. சிவ சிவ மந்திரம்..

Get this widget | Track details | eSnips Social DNA

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்