Thursday, December 30, 2010

எஸ்.பி.பியின் சென்னையில் திருவையாறு 2010எஸ்.பி.பியின் சென்னையில் திருவையாறு 2010

டாக்டர்.எஸ்.பி.பி அவர்கள் தன் பேட்டிகளில் பல தடவை சொல்லி நான் கேள்விபட்டிருக்கிறேன் அது என்ன? சரியான் முறையில் கர்நாடக கற்றுக்கொண்டு நான் தனிப்பட்ட முறையில் ஒரு கர்நாடக கச்சேரி செய்யவேண்டும் அது எப்போது நடைபெறுகிறதோ? தெரியவில்லை கடவுள் அனுக்கிரகம் வேண்டும் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த அறிதான நிகழ்ச்சியை அவரின் அபிமான ரசிகர்கள் ஆவலுடன்
எதிர்பார்த்து கொண்டு இருந்தார்கள். இந்த வருடம் டிசம்பர் மாதத்த்ல் சென்னையில் திடிரென்று ஒரு விளம்பரம் சென்னையில் பிரபலமான லக்‌ஷ்மன் ஸ்ருதி இன்னிசை குழுவினர் சென்னை திருவையாறு என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தினார்கள் ஒரு வாரம் நடந்த இந்த நிகழ்ச்சிகளில் இறுதி நாளான 25 டிசம்பர் நாளன்று டாக்டர் எஸ்.பி.பி அவர்களின் நிகழ்ச்சி என்று எதிர்பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் இதை உறுதி செய்ய
டாக்டர் எஸ்.பி.பி அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரே தெரிவித்தது இந்த நிகழ்ச்சி முற்றிலும் கடவுள் பக்தி பாடல்கள் தான் தனியாகவும் திரைப்படப்பாடல்களில் இருந்தும் நான் பாடிய பாடல்கள் பாடுகிறேன் என்று தெரிவித்தார். இந்த செய்தி அவரின் அன்பு ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் தந்தாலும் என்னையும் சேர்த்துதான் முழு நிகழ்ச்சியும் பக்தி பாடலகள் வழங்குகிறார் என்று தெரிந்து கொண்டு நிகழ்ச்சியை காண
மிகவும் ஆவலுடன் இருந்தார்கள்.

டாக்டர் எஸ்.பி.பி அவர்கள் ரசிகர்களை சிறிதும் ஏமாற்றவில்லை மிகவும் அற்புதமாக பாடி அசத்தினார் நானும் நிகழ்ச்சியை சிறிது நேரம் கேட்டேன் (அப்போது ஊர் திரும்ப வேண்டிய அவசரத்தில் இருந்தேன்) அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் மிகவும் அமைதியுடன் கேட்டு ரசித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக அவரின் மெல்லிசை நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சி குதுகலம குதித்து விளையாடும். 3 பாடல்கள் நடுவில்
டாக்டர் எஸ்.பி.பி அவர்களே ரசிகர்களை பார்த்து என்னங்க நீங்க அமைதியாக இருந்து கேட்பதை பார்த்தால் எனக்கு பயமா இருக்குது நான் நல்லா பாடவில்லயானாலும் கைதட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தது அவரையும் அடடே எப்பேர்பட்ட மனுசன் என்று நினைத்துகொண்டு எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்து கைதட்டியதை நினைத்தால் எனக்கு இப்போதும் புல்லரிக்குது. அவரின் பிசியான நேரத்திலும் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி அழைத்தது கண்டு மெய் சிலிர்த்து போனேன். ரசிகரகளின் மீது அவர் வைத்து இருக்கும் அன்பு அவரின் இனிமையான் குரலை போன்றே அற்புதமானது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடவுள் மீது பக்தி பாடல்களை மிகவும் அனுபவித்து உருக்கமாகி பாடியதற்காக அவர் என்றென்றும் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
1.ப்ரோச்சே வாஎவருரா >> 2. ஓம் ஜக >> 3. ஓம் ஓம்கார >> 4.சங்கீத சாகித்ய >> 5.வேதம் அனுவிநாதம் .

குறிப்பு: நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்களில் இருந்து 5 பாடல்கள் மட்டும் என்னால் பதிய முடிந்தது அலைபேசியில் பதியபட்டதால் ஒலிகோப்பின் தரம் சிறிது இல்லையில்லை பெரிதாகவே மோசமாக இருக்கும் ஒரிஜனல் கேட்டு இந்த தொகுப்பை கேட்பதற்க்கு மனதிற்க்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் பாலுஜி அவர்கள் 30 வருடங்களூக்கு முன் பாடிய பாடல்களை எப்படி சிறிதும் குறைவில்லாமல் அப்படியே பாடுகிறார் என்று நினைத்து
ஆச்சரியப்படுத்துகிறார். ஆகையால் அவற்றை நீங்களூம் கேட்க வேண்டாமா? அதற்காக தான் இந்த பக்திதளத்தில் பதிந்தேன். பாடல்களை கேட்டு உங்கள் உணர்வுகளை எழுதுங்கள் உங்கள் கருத்துக்களை அவர் படிக்கவும் வாய்ப்பு இருக்கும்.

Powered by eSnips.com


Song liste at Prog. Thanks to Mrs.Lakshmi Varadhachari,Chennai, (Yahoo Group SPB Fans)& P.Rameshchandra Phani, Hyderabad. (Yahoo Group SPB Fans)

1. Sangeetha Sahithya Samalnkrite - Raga SANKARABHARANAM
2. Omkaaranadaan - Guruji solo from the movie SANKARABHARANAM
3. Shruti NEEVU Gati, Gathi Neeru Lady Solo - in Ragamalika
4. Vedham Anuvilum Oru - Salangai Oli
5. Sivastotram
6. BROCHEVAAREVARURA Song from SANKARABHARANAM
7. NAGAVULU NIJAMANI solo by Gopika Poornima in the raga Kalyani (Annamacharya Krithi)
8. A song in praise of Lord Krishna - Krishna, Janardhana, Gopinandhana, Giridhara, Govardhana - Solo by Ji
9. Annayilum Sirandha Annai Aval, Thandhayilum Sirandha - by Guruji composer Kannadasan
10. Hari Oom - In praise of Tirupathi venkateswara - SPB Ji and group.
11. Solo by Gopika Poornima - Song : GOVINDAASRITA GOKULABRINDA NOT GOVINDA- SRITA- GOKULA..)
12. Iippasiyil Vona Vizhavum - Solo by SPB Ji
13. Nadhiyil Aaadum Poovanam - from Movie Kaadhal Oviyam
14. Lingashtakam - Solo bu guruji
15. Narayanathe Namo namo by Gopika Poornima solo
16. Naadha vinothangal - Slanagai oli
17. Sivamayamaga Therigirathe - Solo by Guruji in praise of Annamalayar
18. aayarpaadi maaligayil
19. Naada Sariraapara)- (Guruji from the movie SANKARABHARANAM

Thursday, December 23, 2010

ஸ்ரீ ராமகிருஷ்ன ஸ்தோத்திரம்ஜெய் ஹனுமான் ராமகிருஷ்ன ஸ்தோத்திரம்

இந்த வாரம் வரை பாலுஜியின் பக்தி பாடல்கள் பதிவு தான் வரும் ஏனென்றால் சென்னையில்
வருகின்ற 25ஆம் தேதி லக்‌ஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு என்ற பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் ஒரு ஸ்வாரசியமான சம்பவம் எனில் பாலுஜியின் தீவிர ரசிகர்கள் யாகூ குழுவினர் தவறாக நினைத்துக்கொண்டார்கள் அது என்னவெனில். சென்னையில் திருவையாறு என்ற பெயரில் இசை ஜாம்பவான்கள் தொடர்ச்சியாக கடைசி நாள் அன்று பாலுஜியின் கர்நாடக கச்சேரியும் நடைபெறும்
என்று நினைத்துகொண்டார்கள் அது அவர்களின் தவறில்லை ஏனென்றால் பல பேட்டிகளில் பாலுஜி சரியான மேடை கிடைக்கும் போது கர்நாடக இசை நிகழ்த்த வேண்டும் என்று சொல்லியிருந்தார் அந்த பாதிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சி கர்நாடக இசை கச்சேரி இல்லை நூறு சதவீதம் தெய்வீக பாடல்கள் தான் பாடுகிறேன் என்று எனக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்து அனுப்பினார் அதை அவரின் அன்பான ரசிகர்களூக்கு தெரியபடுத்த வேண்டுமென்று அன்புடன் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆகையால் பாலுஜியின் பரவச ப்ரியர்கள் தெய்வீக இசை சங்கமத்தில் நனைய செல்லுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதன் தொடர்ச்சியாகதான் இந்த பதிவு. இத்துடன் பாலுஜியின் ஜெய் ஹனுமான் ராககிருஷ்ன ஸ்தோத்திரம் கேட்டு கடவுள் அருள் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Saturday, September 25, 2010

கோவை நகர் தேவியம்மா

தண்டுமாரியம்மன் பக்தி பாடல்


Get this widget | Track details | eSnips Social DNAஈச்சனாரி ஸ்ரீ விநாயக சரணம்
ஈச்சனாரி ஸ்ரீ விநாயக நீயே துணை

சாமியே சரணம் சாமியே சரணம்
தேவி சரணம் சாமி சரணம் சாமி சரணம்
சாமியே சரணம் சாமியே சரணம்
தேவி சரணம் சாமி சரணம் சாமி சரணம்

மாரியம்மா ஓம் சக்தி
தேவியம்மா ஓம் சக்தி
கோவை தாயே ஓம் சக்தி
தண்டுமாரி ஓம் சக்தி

அம்மா தண்டு மாரியம்மா
கோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே
உன் அருள் நாடி வந்தோமே

கூடி வந்தோமே உன் புகழ் பாடி வந்தோமே

அம்மா நீயே நம்மாளே சந்தோசமே என் நாளூம்
பூசையிலே படையிலிட நேரில் வந்தோமே
உன்னிடம் ஓடி வந்தோமே

காண வந்தோமே உன் அருள் ஞானம் கொண்டோமே

சித்தம் நிலைக்குது சித்தம் நிலைக்குது உனது கோலத்தில்
சிந்தை தெளியுது சிந்தை தெளியுது உனது பார்வையில்

பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்

அம்மா தண்டு மாரியம்மா
கோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே
உன் அருள் நாடி வந்தோமே

கூடி வந்தோமே உன் புகழ் பாடி வந்தோமே

பூச்சாட்டில் விழுகின்ற பூ மகளே
உன் புன்னகையில் மயங்காது பார் உலகே
ஆசாற்றி பணிகின்றோம் மா மகளே
உன் பாதத்தில் வைக்கின்றோம் வா மகளே
அக்ணிச்சாட்டின் அலங்காரமே
ஆனந்தமே அணல் மோகமே
அருள் ஜோதியே ஆதாரமே
ஆராதிப்போம் உன் பாதமே
மும்முனை கம்பத்திலே சுடர் பொங்க வருபவளே
முகூர்த்த நாளிலே தண்டுமாரியுமானவளே
சித்திரை திங்கள் வெள்ளிக்கிழமை உனது கோவிலில்
வந்த சுடரில் மெய் சிலிர்க்குது உனது கோலத்தில்

பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்

அம்மா தண்டு மாரியம்மா
கோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே
உன் அருள் நாடி வந்தோமே

கூடி வந்தோமே உன் புகழ் பாடி வந்தோமே

வேம்பாடும் காடாளூம் மலை மகளே
பெரும் வீதியிலே கரகாட வருபவளே
தீயேந்தும் அடியார் பின் செல்பவளே
என் தேவைக்கு வழியாதும் சொல்பவளே

மேளத்துடன் தாளத்துடன்
யானை வர வருபவளே
வேலாயியே தண்டு மாரியே
வரம் யாவும் தருபவளே
சக்தி கரம் கொண்டு நீ வரும் சந்தனமாளிகையில்
பக்தி திருமணம் கை கொள்ளும் கோவையின் தேவியே
யாவும் நடந்திடும் இது மடிந்திடும் உனது ஆசையில்
ஞானம் பிறந்திடும் அல்லி மெலிந்திடும் உனது பூசையில்

பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்

அம்மா தண்டு மாரியம்மா
கோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே
உன் அருள் நாடி வந்தோமே

கூடி வந்தோமே உன் புகழ் பாடி வந்தோமே

அம்மா நீயே நம்மாளே சந்தோசமே என் நாளூம்
பூசையிலே படையிலிட நேரில் வந்தோமே
உன்னிடம் ஓடி வந்தோமே

காண வந்தோமே உன் அருள் ஞானம் கொண்டோமே

சித்தம் நிலைக்குது சித்தம் நிலைக்குது உனது கோலத்தில்
சிந்தை தெளியுது சிந்தை தெளியுது உனது பார்வையில்

பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்

சித்தம் நிலைக்குது சித்தம் நிலைக்குது உனது கோலத்தில்
சிந்தை தெளியுது சிந்தை தெளியுது உனது பார்வையில்

பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்

Saturday, August 14, 2010

சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில்...பாடல்        : சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில்...
பாடியவர் திரு.S.P.பாலசுப்ரமணியம்.
வெளியீடு சுபம் ஆடியோ விஷன்.
பாலுஜியின் குரலில் அந்த சிவனே எனக்கு ஒரு மயமாகத் தெரிகிறார்.....
குரலில் அப்படி ஒரு உச்சரிப்பு..... 


//  சிவ லீலை செய்யாமல்..சிறுஏனை ஆட்கொள்ள...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...  //


இந்த வரிகளில் நம் அணைவரையும் அந்த சிவனிடத்தில் கொண்டி போய் சேர்த்து விடுகிறார் நம் பாலுஜி....

ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே...
அணலான மலை காண ...மணம் குளிருதே...


சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...


யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
சத்தியம் நீதான்...சகலமும் நீதான்...
நித்தியம் என்னில்... நிலைப்பவன் நீதான்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
சிவ லீலை செய்யாமல்..சிறுஏனை ஆட்கொள்ள...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...


முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உணை காண்கிறேன்...
முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உணை காண்கிறேன்...
தீயெனும் லிங்கம்...ஜோதியில் தங்கும்...
பாய்ந்திடும் சுடராய்...வான்வெளி தொங்கும்...
அருணாச்சலா...உன் கோலமே...
அருணாச்சலா...உன் கோலமே...
மனம் காண வர வேண்டும்...தினந்தோறும் வரம் வேண்டும்...
மலையான நாதனே அருள்வாயப்பா...
மலையான நாதனே அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே...


Wednesday, June 16, 2010

ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
ஆல்பம்: ஈச்சனாரி - திவ்யதரிசனம்

இனிமையான குரலில் ஈச்சனாரி விநாயகரின் புகழ் பாடலை கேட்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல கஜநாதன் உங்களுக்கும் அருள் புரியட்டும்.

மேலும் விபரங்களுக்கு:
திரு.ஏ.சேகர் (பாடகர்)
சேகர் செண்டர் மற்றும் இசை சேவை, கோவை
மின்னஞ்சல் முகவரி:asekercbe@yahoo.com

Get this widget | Track details | eSnips Social DNAகோவையிலே ஈச்சனாரி கோவிலிலே அமர்ந்தவனே
குன்றாக எழுந்தருளி குலம் காக்கும் கணபதியே
ஈடு காயை போட்டு உடைத்து ஈசன் உன்னை நாடுகின்றேன்
இகசுகத்தை இன்மைக்கும் மறுமைக்கும் தாருமய்யா
எந்த நாளூம் உன்னைப் பணியும் பாக்கியத்தை தாருமய்யா
ஈச்சானாரி கண்பதியே..

ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
என்னை ஆடவைத்து ஆடுகின்ற ஐங்கரனே
மேல கற்பகமே கண் மலராய் உன்னை பணிகின்றேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்

தந்தையாக வீற்றிருக்கும் தாயும் நீதானே என்னை
தாயுமாக அரவணைக்கும் தந்தை நீதானே
தந்தையாக வீற்றிருக்கும் தாயும் நீதானே
தாயுமாக அரவணைக்கும் தந்தை நீதானே

ஈசன் வந்து நின்ற களம் வாசம் கொண்ட வேலவனே
தேடி வந்து நின்ற தளம் கோயில் கண்ட கோமகனே
தினம் தினம் உன்னை கண்டால் கூட
காணும் ஆவல் சற்றும் குறையாதே
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்

ஏட்டினிலே எழுதிவைத்த பாட்டு உனக்கு போதலையோ
வேதம் கண்ட கணநாதனே
என்ன சொல்லி புரியலையோ எந்தன் மொழி தெரியலையோ
ஈச்சனாரி கஜராஜனே
இன்னும் என்ன மனச்சலனம் ஏனிந்த பெரும் தயக்கம்
என்னை ஆளவந்த திருக்கோயில் கொண்ட ஐயன் நீதானே
மூசிகன் ஏறிடும் உத்தமி அழகே முதலே கணபதியே
யாசகம் ஏற்றிடும் என் மனப்பாத்திரம் எங்கே உன் கருணை
ஒற்றை அருகம் புல்லை தந்த போதினில்
உள்ளம் குறைகள் யாவும் நீக்கும் நாயகன்
என்னைப் பொருளாய் ஏற்றிடும் காலம்
கணபதி நாதா இன்னும் வரவில்லையோ
கணநாதா....... கண் பாராய்
மனம் போதும் விடை தாராய்.. விநாயகனே

ஏழைக்கு இறங்கும் ஈச்சனாரி கருணைக்கடலே
என்னைப்பாராய்..

ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
என்னை ஆடவைத்து ஆடுகின்ற ஐங்கரனே
மேல கற்பகமே கண் மலராய் உன்னை பணிகின்றேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்