Thursday, December 23, 2010

ஸ்ரீ ராமகிருஷ்ன ஸ்தோத்திரம்



ஜெய் ஹனுமான் ராமகிருஷ்ன ஸ்தோத்திரம்

இந்த வாரம் வரை பாலுஜியின் பக்தி பாடல்கள் பதிவு தான் வரும் ஏனென்றால் சென்னையில்
வருகின்ற 25ஆம் தேதி லக்‌ஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு என்ற பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் ஒரு ஸ்வாரசியமான சம்பவம் எனில் பாலுஜியின் தீவிர ரசிகர்கள் யாகூ குழுவினர் தவறாக நினைத்துக்கொண்டார்கள் அது என்னவெனில். சென்னையில் திருவையாறு என்ற பெயரில் இசை ஜாம்பவான்கள் தொடர்ச்சியாக கடைசி நாள் அன்று பாலுஜியின் கர்நாடக கச்சேரியும் நடைபெறும்
என்று நினைத்துகொண்டார்கள் அது அவர்களின் தவறில்லை ஏனென்றால் பல பேட்டிகளில் பாலுஜி சரியான மேடை கிடைக்கும் போது கர்நாடக இசை நிகழ்த்த வேண்டும் என்று சொல்லியிருந்தார் அந்த பாதிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சி கர்நாடக இசை கச்சேரி இல்லை நூறு சதவீதம் தெய்வீக பாடல்கள் தான் பாடுகிறேன் என்று எனக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்து அனுப்பினார் அதை அவரின் அன்பான ரசிகர்களூக்கு தெரியபடுத்த வேண்டுமென்று அன்புடன் என்னிடம் கேட்டுக்கொண்டார். ஆகையால் பாலுஜியின் பரவச ப்ரியர்கள் தெய்வீக இசை சங்கமத்தில் நனைய செல்லுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதன் தொடர்ச்சியாகதான் இந்த பதிவு. இத்துடன் பாலுஜியின் ஜெய் ஹனுமான் ராககிருஷ்ன ஸ்தோத்திரம் கேட்டு கடவுள் அருள் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்