தண்டுமாரியம்மன் பக்தி பாடல்
|
ஈச்சனாரி ஸ்ரீ விநாயக சரணம்
ஈச்சனாரி ஸ்ரீ விநாயக நீயே துணை
சாமியே சரணம் சாமியே சரணம்
தேவி சரணம் சாமி சரணம் சாமி சரணம்
சாமியே சரணம் சாமியே சரணம்
தேவி சரணம் சாமி சரணம் சாமி சரணம்
மாரியம்மா ஓம் சக்தி
தேவியம்மா ஓம் சக்தி
கோவை தாயே ஓம் சக்தி
தண்டுமாரி ஓம் சக்தி
அம்மா தண்டு மாரியம்மா
கோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே
உன் அருள் நாடி வந்தோமே
கூடி வந்தோமே உன் புகழ் பாடி வந்தோமே
அம்மா நீயே நம்மாளே சந்தோசமே என் நாளூம்
பூசையிலே படையிலிட நேரில் வந்தோமே
உன்னிடம் ஓடி வந்தோமே
காண வந்தோமே உன் அருள் ஞானம் கொண்டோமே
சித்தம் நிலைக்குது சித்தம் நிலைக்குது உனது கோலத்தில்
சிந்தை தெளியுது சிந்தை தெளியுது உனது பார்வையில்
பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்
அம்மா தண்டு மாரியம்மா
கோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே
உன் அருள் நாடி வந்தோமே
கூடி வந்தோமே உன் புகழ் பாடி வந்தோமே
பூச்சாட்டில் விழுகின்ற பூ மகளே
உன் புன்னகையில் மயங்காது பார் உலகே
ஆசாற்றி பணிகின்றோம் மா மகளே
உன் பாதத்தில் வைக்கின்றோம் வா மகளே
அக்ணிச்சாட்டின் அலங்காரமே
ஆனந்தமே அணல் மோகமே
அருள் ஜோதியே ஆதாரமே
ஆராதிப்போம் உன் பாதமே
மும்முனை கம்பத்திலே சுடர் பொங்க வருபவளே
முகூர்த்த நாளிலே தண்டுமாரியுமானவளே
சித்திரை திங்கள் வெள்ளிக்கிழமை உனது கோவிலில்
வந்த சுடரில் மெய் சிலிர்க்குது உனது கோலத்தில்
பக்தி திறக்குது பக்தி திறக்குது உனது வாசலில்
சக்தி பெருகுது சக்தி பெருகுது உனது கோவிலில்
அம்மா தண்டு மாரியம்மா
கோவை நகர் தேவியம்மா
ஆதி சக்தி தேவி உன்னை தேடி வந்தோமே
உன் அருள் நாடி வந்தோமே
கூடி வந்தோமே உன் புகழ் பாடி வந்தோமே
வேம்பாடும் காடாளூம் மலை மகளே
பெரும் வீதியிலே கரகாட வருபவளே
தீயேந்தும் அடியார் பின் செல்பவளே
என் தேவைக்கு வழியாதும் சொல்பவளே
மேளத்துடன் தாளத்துடன்
யானை வர வருபவளே
வேலாயியே தண்டு மாரியே
வரம் யாவும் தருபவளே
சக்தி கரம் கொண்டு நீ வரும் சந்தனமாளிகையில்
பக்தி திருமணம் கை கொள்ளும் கோவையின் தேவியே
யாவும் நடந்திடும் இது மடிந்திடும் உனது ஆசையில்
ஞானம் பிறந்திடும் அல்லி மெலிந்திடும் உனது பூசையில்