ஆல்பம்: ஈச்சனாரி - திவ்யதரிசனம்
இனிமையான குரலில் ஈச்சனாரி விநாயகரின் புகழ் பாடலை கேட்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல கஜநாதன் உங்களுக்கும் அருள் புரியட்டும்.
மேலும் விபரங்களுக்கு:
திரு.ஏ.சேகர் (பாடகர்)
சேகர் செண்டர் மற்றும் இசை சேவை, கோவை
மின்னஞ்சல் முகவரி:asekercbe@yahoo.com
|
கோவையிலே ஈச்சனாரி கோவிலிலே அமர்ந்தவனே
குன்றாக எழுந்தருளி குலம் காக்கும் கணபதியே
ஈடு காயை போட்டு உடைத்து ஈசன் உன்னை நாடுகின்றேன்
இகசுகத்தை இன்மைக்கும் மறுமைக்கும் தாருமய்யா
எந்த நாளூம் உன்னைப் பணியும் பாக்கியத்தை தாருமய்யா
ஈச்சானாரி கண்பதியே..
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
என்னை ஆடவைத்து ஆடுகின்ற ஐங்கரனே
மேல கற்பகமே கண் மலராய் உன்னை பணிகின்றேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
தந்தையாக வீற்றிருக்கும் தாயும் நீதானே என்னை
தாயுமாக அரவணைக்கும் தந்தை நீதானே
தந்தையாக வீற்றிருக்கும் தாயும் நீதானே
தாயுமாக அரவணைக்கும் தந்தை நீதானே
ஈசன் வந்து நின்ற களம் வாசம் கொண்ட வேலவனே
தேடி வந்து நின்ற தளம் கோயில் கண்ட கோமகனே
தினம் தினம் உன்னை கண்டால் கூட
காணும் ஆவல் சற்றும் குறையாதே
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
ஏட்டினிலே எழுதிவைத்த பாட்டு உனக்கு போதலையோ
வேதம் கண்ட கணநாதனே
என்ன சொல்லி புரியலையோ எந்தன் மொழி தெரியலையோ
ஈச்சனாரி கஜராஜனே
இன்னும் என்ன மனச்சலனம் ஏனிந்த பெரும் தயக்கம்
என்னை ஆளவந்த திருக்கோயில் கொண்ட ஐயன் நீதானே
மூசிகன் ஏறிடும் உத்தமி அழகே முதலே கணபதியே
யாசகம் ஏற்றிடும் என் மனப்பாத்திரம் எங்கே உன் கருணை
ஒற்றை அருகம் புல்லை தந்த போதினில்
உள்ளம் குறைகள் யாவும் நீக்கும் நாயகன்
என்னைப் பொருளாய் ஏற்றிடும் காலம்
கணபதி நாதா இன்னும் வரவில்லையோ
கணநாதா....... கண் பாராய்
மனம் போதும் விடை தாராய்.. விநாயகனே
ஏழைக்கு இறங்கும் ஈச்சனாரி கருணைக்கடலே
என்னைப்பாராய்..
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
என்னை ஆடவைத்து ஆடுகின்ற ஐங்கரனே
மேல கற்பகமே கண் மலராய் உன்னை பணிகின்றேன்
ஈச்சனாரி சந்நிதியில் நான் நின்றேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
எந்தன் இறைவா கணபதியே உன்னைக் கண்டேன்
1 comment:
Great Ravee Sir. Perfect fit to 'Vinaayagar Chadhurthi'.
Anban,
V. Gopalakrishnan.
Post a Comment