சென்ற வாரம் கோகுலாஷ்டமி சிறப்பு பதிவாக இந்த தளத்தில் நமது பாலுஜி அவர்கள் பாடிய இரண்டு பக்திப்பாடல்கள் பதிவு செய்தேன். அதை யாகூ குழுவில் நண்பர்களூக்காக சுட்டியை மின்னஞ்சலாக அனுப்பினேன். உண்மையிலே கிருஷ்னன் மீதுபாடிய பக்திப்பாடல் தான் போட வேண்டும் ஆயர்பாடி மாளிகையில் பாடல் ஏற்கெனவே இதே தளத்தில் முன்னமேயே பதிவு செய்து விட்டபடியால் மேலும் கிருஷ்னன் பக்திபாடல் தேட நேரமின்மையால் மற்ற பதிவுகளாக அனுப்பிவைத்தேன். அந்த சுட்டீயைப்பார்த்து நமது குழுவின் உறுப்பினர் திரு.ராஜித், டொர்னோட்டோவில் இருந்து அவரின் அடக்கமுடியா ஆவலாக ஒரு கிருஷ்னன் பாடலை அவரே எனக்கு அனுப்பிவைத்தார். மேலும் அவர் குறிப்பிட்டது கோகுலாஷ்டமி என்று சொல்லிவிட்டு பெருமாள் பாடலையும், சிவாஸ்டகம் பாடலையும் பதிவுசெய்ததை மறைமுகமாக குறிப்பிட்டு பரவாயில்லை பாலுஜி பாடலை எந்த சூழ்நிலையைலும் அவரின் இனிமையான குரலை கேட்கலாம் என்றார். அவர் இப்படி எனக்கு சொன்னது என் மனதினை உறுத்திக்கொண்டு இருந்ததை ஆதராவாக தடவிகொடுத்தது போல் இருந்தது. அவருக்கு என் நன்றி.
இந்த பாடலை இசையமைத்து நமது பாலுஜி அவர்களை வைத்து அவரின் முதல் பதிவாக 1996 ஆம் ஆண்டே பதிவு செய்துள்ளார். அதிக பாடல்கள் பாலுஜியை வைத்து இசையமைத்து ஆல்பங்களாக வெளியிட்டுள்ளார். வியாபார ரீதியாக கேசட்டுகள் வந்தாலும் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டிருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நானே இப்போது தான் முதல் தடவையாக இந்த அழகான கிருஷ்னன் பாடலை கேட்டு அசந்துபோனேன். இதே போல் எத்தனை பாடல்கள் நம் செவிக்கு எட்டாமல் எங்கு எங்கு எந்தெந்த மொழிகளில் வெளியே தெரியாமல் இருக்கின்றனவோ அந்த பாலா(லு)ஜிக்கே வெளிச்சம்.
திரு. ராஜ் சார் போல் அவர்களே முன் வந்து நமக்கு வழங்கினால் தான் தெரிகிறது எத்தனை அற்புதமான மானிக்கங்கள் இருக்கின்றன என்று. திரு.ராஜ் சாரைப்பற்றி நியுயார்க், மற்றும் யு.எஸ். இணைய நண்பர்கள் தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன். ராஜ் சாரின் தளங்களில் சென்று பாருங்கள் (சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் தளத்தை வைத்துள்ளார், அவரின் இசை குழுவின் தளமும் உள்ளது. மேலும் அறிய பல தகவல்கள் வைத்துள்ளார் நானே சொல்லுவதை விட நீங்களே ஒரு தடவை அவரின் சுட்டிக்கு விஜயம் செய்து அவருக்கு வாழ்த்து சொல்லுங்கள் அவர் மிக்க மகிழ்ச்சி அடைவார். பாலுஜியை வைத்து இன்னும் நிறைய பாடல்கள் பதிந்துள்ளார் என்று சொன்னார் அதையும் பின் வரும் பதிவுகளில் கேட்கலாம். இவர் அறிமுக காரணமாக இருந்த பாலுஜிக்கு என் மனார்ந்த நன்றி.
முக்கியமான தகவல் என்னவென்றால் இந்த பாடலின் தலைப்பை பாலுஜி பாடுவதற்கு முன் அவரே தலைப்பு வைத்தார் என்று திரு.ராஜ் சார் சொன்னது என்னை மெய் சிலிர்க்க வைத்தது. மேலும் பதிவின் போது அறிய பல தகவல்கள் சொல்லியிருக்கிறார் மேலும் சொல்லுவார் என்று நம்புகிறேன். அவைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். கிருஷ்னன் மீது பாலுஜி அவர்கள் பாடிய இந்த அழகான பாடலை கேளூங்கள் தங்களின் அபிப்ராயங்களையும், வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவியுங்கள். இனி 8 நிமிச பாடலை கேட்போமா?
Rajith www.newyorkraj.com www.saregamusic.com www.msviswanathan.com
ஆல்பம்: கிருஷ்னம் வந்தே ஜகத்குரும்
இசை: திரு.ராஜ், நியுயார்க்
பாடியவர்: எஸ்.பி.பாலு
பாடலாசிரியர்: திரு.உத்திரமேரூர் கோதண்டராமன்
வெளியீடு: சங்கீதா காசேட்
வருடம்: 1996
காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்
கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்
அருள் மழை பொழிவான் மலர்கண்ணன்
காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்
பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே
காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்
ஞானபூமியில் உயிர்தரும் ஜீவநாதமா
கோதை நாயகா மறுமுறை கீதை சொல்லுவான்
ஞானபூமியில் உயிர்தரும் ஜீவநாதமா
கோதை நாயகா மறுமுறை கீதை சொல்லுவான்
கதிர் ஒளியாய் துயில் எழுவாய்
குழலிசையாய் வேதமாய்
விழியசையாய் ஜோதியாய்
ஹரிஹரி எனும் திருமந்திரம்
தந்திடும் ரீங்கார சுதியும்
பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே
காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்
சேவல் கூவிட தரிசன ஆவல் மீறிட
கோவில் வாசலில் திருவிளக்கேற்றி பாடினோம்
சேவல் கூவிட தரிசன ஆவல் மீறிட
கோவில் வாசலில் திருவிளக்கேற்றி ஏற்றி பாடினோம்
வைகறையின் வானத்தைப்போல்
மையிருளை நீக்கவே
மெய்பொருளை காணவே
பூவினங்களின் மெல்லியஒலி
சொல்லிடும் சலங்கை ஜதியில்
பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே
காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்
பாத பூஜையில் பரவச பக்தி வேள்வியில்
வாசுதேவனை வணங்கிடும் காலை வேளையில்
பாத பூஜையில் பரவச பக்தி வேள்வியில்
வாசுதேவனை வணங்கிடும் காலை வேளையில்
மானிடர்களே தேவர்களாய்
மாறிடுவோம் பாருங்கள்
மாதவனை பாடுங்கள்
இந்த இந்த நிலை பெறதினமும்
அனைவரின் உறக்கம் கலைந்திட
பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே
காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்
கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்
அருள் மழை பொழிவான் மணிவன்னன்
பூமேல் ஆடும் வண்டுகளே
இன்னிசை பூபாளம் பாடுங்களே
பூபாளம் கண் அசைந்தாலே
அசையும் பூலோகம் என்றிசையுமே
காலை இளம் கதிரவன் போல்
கண் மலர்வான் மலர் கண்ணன்
திருக்கண்மலர்வான் மலர் கண்ணன்
கருமை நிற கார்முகில் போல்
மழை பொழிவான் மணிவன்னன்
அருள் மழை பொழிவான் மணிவன்னன்