
மீனாட்சி அம்மன் மீது ஒரு அருமையான பக்தி பாடல். கேட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.
சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே வைகை கரையிலே
கோவில் கொண்ட மீணாட்சியே தாயே
நம் மலை அரசன் செய்த தவப்பயனால்
அவன் மகளாகவே வாழ்ந்த மீனாட்சியே
தாயே
சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே..
அகந்தைக்குள் சமணரை பார்த்தாலே
ஞான சம்பந்தர் வென்றது மதுரையிலே
சுகம் தரும் தமிழ் மூன்றும்
தமிழ் சங்கம் தந்தது நீ வாழும் பதியிலே
அகந்தைக்குள் சமணரை பார்த்தாலே
ஞான சம்பந்தர் வென்றது மதுரையிலே
சுகம் தரும் தமிழ் மூன்றும்
தமிழ் சங்கம் தந்தது நீ வாழும் பதியிலே
சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே
கயல்விழி உன்னைகண்டு சொக்கநாதர்
திருமனம் புரிய வைப்பது உந்தன் அழகல்லவா
வாழ்வில் கவலைகள் தீர்ந்து நலம் காணவே
உன் கருணை ஒன்றே சிறந்த மருந்து அல்லவா
கயல்விழி உன்னைகண்டு சொக்கநாதர்
திருமனம் புரிய வைப்பது உந்தன் அழகல்லவா
வாழ்வில் கவலைகள் தீர்ந்து நலம் காணவே
உன் கருணை ஒன்றே சிறந்த மருந்து அல்லவா
சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே வைகை கரையிலே
கோவில் கொண்ட மீணாட்சியே தாயே
நம் மலை அரசன் செய்த தவப்பயனால்
அவன் மகளாகவே வாழ்ந்த மீனாட்சியே
தாயேஏஏ
சிற்பக் கலை வளம் திகழும்
தென் மதுரையிலே வைகை கரையிலே
கோவில் கொண்ட மீணாட்சியே...
|
No comments:
Post a Comment