Thursday, August 16, 2007

பாலசுப்ரமணியம் பாட்டு



அற்புதமான தபேலா தாளத்துடன் பாலு அவர்கள் பாடும் இந்த பாடல் அவர் பெயரிலேயே அழகான பல்லவியில் தொடங்கும் பாடல். இந்த பக்திப்பாடலை எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் என்று எனக்கு தெரியாது. கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பாடலை கேட்டு அனுபவியுங்கள்.

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
கோடி மனம் பாராட்ட கேட்டு
குரலால் இசை கொழிக்க
சொட்டும் கவிதை சுனையில் பொங்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

எந்த ஊரும் எந்த நாடும் சென்று
சந்ததோடு சிந்து தேனாய் இனிக்க
பந்த பாசம் என்று தேடும் பக்தர்
கொண்ட நேசம் உலகம் எங்கும் ஒலிக்கும்

கந்தன் வீட்டு பந்தம் எல்லாம் ஜொலிக்கும்
தொண்டர் கூட்டம் தோன்றி அங்கே அளிக்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

எந்த தாளம் எந்த ராகம் சேரும்
அந்த பாடல் பரிசு வாங்கி தீரும்

தங்கத்தேரில் வந்து உலாவும் தென்றல் நீ
சங்கத்தமிழில் சாறு நிறைந்த பொங்கல்

பழைய பக்தி மலையில் கொடியும் பறக்கும்
செழிக்கும் வாழ்வு சேர்ந்து செல்வம் சிறக்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

எந்த வேடம் எந்த கோலம் ஏற்கும்
அந்த கோலம் குமர வடிவில் போற்றும்
உந்தன் மலையில் வந்து பாடும் பேரு
கந்தன் பாடல் உந்தன் நாவில் சுவைக்கும்

பொங்கும் அமுதம் புதையல் போல மதிக்கும்
எங்கும் நிகழும் எழிழை போற்றி துவக்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
வரத்தால் குரல் இனிக்க
எட்டு திசையும் இனிமை கொஞ்சும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு
குரலால் இசை கொழிக்க
சொட்டும் கவிதை சுனையில் பொங்கும்

பாலசுப்ரமணியம் பாட்டு
ஏழு ஸ்வரம் தாலாட்ட கேட்டு

Get this widget | Share | Track details

2 comments:

Anonymous said...

adadada indha Ravi sir ku engendhu ippedi arumaiyana, aridhana songs ellam kidaikudhu???

Ippedi patta song a nammku kodukara ravi sir kuuu orruuu ooooooooooooooooo podungo

Anonymous said...

அட ஸ்வீட்60 இந்தியாஅவர்களே..
ரொம்பா நாள் கழித்து வந்துருக்கீங்க. இனி உசாராக இருக்ககனும்ப்பா..

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்