நம் மனதிற்கு ஓர் அமைதியை உண்டாக்கும் ஓர் அருமையான பக்தி மனம் கமழும் மூகாம்பிகையம்மன் பாடல் இந்த ஆல்பத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன இந்த ஆலபம் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அந்த சமயம் இந்த பாடல்கள் அதிகம் ரேடியோவில் ஒலிபரப்பபட்டு வரும் இதில் வரும் மற்ற பாடல் பின்னர் ஒவ்வொன்றாக பதியப்படும் தற்போது மிகவும் ஆசையுடன் கேட்ட ஹைதராபாத் உஷா அவர்கள் விருப்பமான பாடல் கேட்டு மகிழுங்கள். இந்த கோப்பை அனுப்பிவைத்த உஷா மேடத்திற்கு பாலு ரசிகர்கள் சார்பாக நன்றி.
ஆல்பம்: மூகாம்பிகை தாயே
தாயே ஓங்கார நாயகியே வந்தருள்வாய்
முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே
முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே
சக்தியை தருவாயே நெஞ்சில் சாந்தி தருவாயே
சக்தியை தருவாயே நெஞ்சில் சாந்தி தருவாயே
பக்தியை செய்கின்றோம் உந்தன் பாதம் பணிகின்றோம்
பக்தியை செய்கின்றோம் உந்தன் பாதம் பணிகின்றோம்
சக்தியின் நாயகியின் அருள் புகழ் பெருமையை பாடுகின்றோம்
சித்திரையில் மார்கழியில் உன் சிந்தனையில் வந்ததம்மா
சித்திரையில் மார்கழியில் உன் சிந்தனையில் வந்ததம்மா
வத்தாத கடல் நீரும் உந்தனருள் தந்ததம்மா
வத்தாத கடல் நீரும் உந்தனருள் தந்ததம்மா
எத்திக்கும் அரசாலும் எந்தன் குல தெய்வமம்மா
எத்திக்கும் அரசாலும் எந்தன் குல தெய்வமம்மா
ஓம்... ஓம்.. சக்திக்கும் பொருள் சொன்ன
கடலணையின்?? தாயம்மா
சூரியனாக இருக்கின்றாய் சந்திரனாக சிரிக்கின்றாய்
சூரியனாக இருக்கின்றாய் சந்திரனாக சிரிக்கின்றாய்
வாரி அருள் இறைக்கின்றாய் மாரியாய் பொழிகின்றாய்
வாரி அருள் இறைக்கின்றாய் மாரியாய் பொழிகின்றாய்
தேரினில் வருகின்றாய்
அந்த தேரினில் வருகின்றாய்
என்றும் காட்சி தருகின்றாய்
நேரினிலே உன்னை காண
இணைகின்றோம் வருவாயோ
முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே
சக்தியை தருவாயே நெஞ்சில் சாந்தி தருவாயே
பக்தியை செய்கின்றோம் உந்தன் பாதம் பணிகின்றோம்
சக்தியின் நாயகியின் அருள் புகழ் பெருமையை பாடுகின்றோம்
முக்தி தரும் தாயே எங்கள் மூகாம்பிகை நீயே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
ஓங்கார நாயகியே வந்தருள்வாயே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
ஓங்கார நாயகியே வந்தருள்வாயே
ஓங்கார நாயகியே வந்தருள்வாயே
ஓங்கார நாயகியே வந்தருள்வாயே
|
No comments:
Post a Comment