இந்த பாடல் 35 வருடங்களூக்கு முன் பாடிய பாடல் தான். இன்னமும் கேட்டால் நமது மனம் வெண்ணையாக உருகிவிடுகிறது. அன்றும், இன்றும், என்றும் நம்மை அமைதியாக தூங்க வைக்கும் பாடல். //அவன் வாய் நிறைய மண்ணை உண்டு.. மண்டலத்தை காட்டிய பின்// இந்த வரிகளைப் போல பாலு அவர்கள் வெண்ணையை தின்று.. நெய்யாக தம் குரலில்
இனிமையை காட்டிய படி நம்மையெல்லாம் உறங்க வைக்கிறார்.
இந்த பாடலை சுந்தர் அவர்கள் "பாடும் நிலா பாலு" தளத்தில் துவக்க பாடலாக போட்டு நம்மை அசத்தினார். திரும்பவும் அவரின் வேண்டுகோளுக்கினங்க. இந்த பக்தி பாடல் தளத்தில் பதிவதில் பெருமையடைகிறேன். இதே பாடலை திருமதி. என். உஷா, திருமதி.உஷாசங்கர் (யார் கேட்டார்கள் என்று நினவில்லை அதனால் இருவர் பெயரையும் போட்டுட்டேன் எதுக்கு வம்பு, தும்பெல்லாம். ஹி ஹி ஹி) இருவரின் விருப்பமாகவும் இந்த விருப்பாடலாகவும் வருகிறது.
ஆயர்பாடி கண்ணன் உங்களூக்கு வாழ்வில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தரட்டும்.
பாடல்: ஆயர்பாடி மாளிகையில்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
மண்டலத்தை காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோஓஒ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோஓஒ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரும்
கண்ணத்திலே கண்ணமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரும்
கண்ணத்திலே கண்ணமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவர் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
நாதஸ்வரம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
நாதஸ்வரம் மீதில் அவன்
நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட
ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
கண்ணன் அவன் தூங்கிவிட்டால்
காட்டினிலே தூங்கிவிடும்
அன்னையரே துயில் எழுப்ப வாரீரோ
கண்ணன் அவன் தூங்கிவிட்டால்
காட்டினிலே தூங்கிவிடும்
அன்னையரே துயில் எழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
|