கிட்டத்தட்ட 17 வருடங்கள் பிறகு இந்த பக்திப்பாடல்களை கேட்டேன். இந்த பக்திப்பாடல்களை நம் இணையதள பாலு ரசிகர்ளுக்கு படைக்க வேண்டுமே என்ற ஆர்வத்திலும், ஆசையாலும் தோன்றிய இந்த முயற்சி. இந்த பதிவில் ஆறு பாடல்கள் உள்ளன. எல்லாமுமே பக்திப்பாடல்கள். பக்திப்பாடல்கள் என்றால் சாதாரனமானது இல்லை. இந்த பாடல்கள் எத்தன பேருக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியாது. ஏனென்றால் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக மேற்கத்தி இசையமைப்பில் பதிவு செய்தது. பலபேருக்கு இந்த ஆல்பம் கடைகளில் கிடைக்கிறதா என்று கூட நினக்கத்தோன்றலாம்.
1995ஆம் ஆண்டு HMV ஆடியோ நிறிவனத்தார் வெளியிட்ட "டேன்ஸ் பார் காட் சேக்" Dance for God Sake" இந்த பக்திநடனப்பாடல் ஆல்பத்தை திரு.நீலா ப்ரசாத் என்பவர் இசையமைத்திருக்கார் பாலுவின் குரலை எப்படியெல்லாம் விதவிதமாக வித்தியாசமாக பயன்படுத்தியிருக்கார் என்று ஒரு முறை கேட்டுவிட்டு சொல்லுங்கள். முக்கியமாக பாலு ரசிகர்கள் ஏன் அனைத்து ரசிகர்களும் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக ஒவ்வொரு பாடலிலும் ஒரு வார்த்தைதான் பாலு பாடியிருப்பார் அதுவும் எத்தன ஸ்டைலில் கேளுங்கள் நண்பர்களே.அப்படியே அசந்துபோயிருவீங்க.
இந்த பதிவை கேட்டுவிட்டு நிச்சயம் தினமும் உங்கள் கடவுள் ப்ரார்த்தனையில் முக்கியம் பூஜைகுரிய பாடலாக இவையாவும் இடம் பெறும் அதுமட்டுமல்லாமல் அவரின் இனிமையான குரலின் மீது இன்னும் அபரிமிதமான அன்பும் மரியாதையும் ஏற்படுவது முற்றிலும் உண்மை.
அவரை சந்திக்க சென்றால் இந்த வார்த்தையை கேட்காமல் யாரும் திரும்பி வந்திருக்கமாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை தான் இது. "GOD BLESS YOU" இந்த தளத்திற்க்கு வருகை புரிந்து அவருடைய பக்திப்பாடல்கள் கேட்கும் உங்களுக்கு. அந்த கடவுளீன் ஆசீர்வாதம் மட்டுமல்ல, இந்த "BALUJI BLESS YOU" பாலுஜியின் ஆசீர்வாதம் நிச்சயம் உங்களூக்கு கிடைக்கும்.
இந்த ஆல்பத்தின் 6 வது பதிவாக "ஓம் நமச்சிவாயா" பாடல்.
ஓம் நமச்சிவாயா
ராகம்: ரேவதி
இசை: திரு.நீலா ப்ரசாத்
வருடம்: 1995
தயாரிப்பு: ஹெச்.எம்.வி.
|
1 comment:
here u can download different type of om chanting
http://vasantruban.blogspot.com/2010/11/om-chant.html
Post a Comment