எத்தனையோ நாமங்கள் பெருமாளுக்கு, இருந்தாலும் அதில் கோவிந்த நாமமே அவனுக்கு மிகவும் விருப்பமாகும், கோவிந்த நாமத்திற்க்கு பலவித அர்த்தங்கள் உண்டு.
1. "கோ" என்றால் கோவில், "விந்தன்" என்றால் மீட்டல். பூமியை வராக அவதாரம் எடுத்து மீட்டவன் கோவிந்தன்.
2. "கோ" என்றால் பசு "விந்தன்" என்றால் காப்பாற்றியவன். கிருஷ்னா அவதாரத்தில் கோவர்த்தன கிரியை தூக்கி கோவினத்தையும் கோவர்களையும் காப்பாற்றியவன் கோவிந்தன்.
3.வேதாந்த உலகில் "கோ" என்றால் ஜீவாத்மா "விந்தன்" என்றால் நிறைந்தவன், ஜீவாத்மாவாய் நிறைந்த பரமாத்மா கோவிந்தன்.
4. "கோ" என்றால் நல்ல சுயமான வாழ்க்கை "விந்தன்" என்றால் உரைப்பவன் உலகம் வாழ விஸ்வரூபம் எடுத்து "கீத உபதேசம்" உரைத்தவன் கோவிந்தன்.
கோவிந்த நாமத்தின் பெருமை நம் வாக்கிற்க்கும், மனதிற்கும், கண்களுக்கும் எட்டாததாகும். ஷேத்திர பந்துரு என்ற கொடிய பாவி கோவிந்த நாமத்தை உபதேசமாய் பெற்று, உரைத்து பாவ விணைகளைத்தீர்த்தான் என்கிறது சேத்திர பந்து.
ஸ்ரீ வேங்கிடேசனின் கோவிந்த நாமம் தான், நம்மை சிறப்பான பாதையில் வழி நடத்தி செல்கிறது.
திரளபதி கதறிய கோவிந்த நாமத்தை அவளது மானத்தை காப்பாற்றியது ஏன் கோவிந்தனை விட மகிமைகள் மிகக்கொண்டது கோவிந்த நாமமே.
ஏழு மலையானே, வேங்கடரமணா கோவிந்தா.. கோவிந்தா..
அடிக்கொருமுறையும், படிக்கொருமுறையும் கோஷம் கேட்பது கோவிந்தா.. கோவிந்தா..
ஆபத்பாண்டவா, அனாதை ரட்சகா கோவிந்தா.. கோவிந்தா..
கோவிந்தா.. கோவிந்தா...
ஸ்தோத்திரம்
"ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா"
|
No comments:
Post a Comment