Wednesday, June 13, 2007

ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன்

Image and video hosting by TinyPic
"ஸ்ரீரங்க ரங்க நாதனி்ன்" என்ற இந்தப் பாடல் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பாடல் வகையில் அமைந்த ஒரு அற்புதமான பாடல். பாடல் ஆரம்பிக்கையிலேயே நம் மனதில் இடையறாது எழுந்து கொண்டிருக்கும் இரைச்சல்களை உஷ் என்று அடக்கி விடுகிறது. அற்புதமான மெட்டும், இசையும், குரலும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. வாலி - அவரது சொந்த மண்ணைப் பற்றிய பாடல் என்பதாலோ என்னவோ - அற்புதமாக எழுதியிருக்கிறார்.

"இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி" என்று முதல் வரி முடிந்ததும் ஒரு வீணை இசைக் கொத்து வரும். அதற்குக் காட்சியாக கோவில் தூண்கள் சரசரவென்று இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் வினாடியில் கடந்து போவதைக் காட்டுவார்கள். வெகு அபூர்வமாக பாடலும் காட்சியாக்கமும் அற்புதமாகச் சில பாடல்களுக்கு அமையும். அதில் இந்தப் பாடலும் ஒன்று என்பதற்கு அந்த ஒரு காட்சியே சாட்சி.

மகாநதி ஷோபனாவும் பாலுவும் பாடியிருக்கும் இந்தப் பாடலை நான் எப்போது கேட்டாலும் காவிரியின் நினைவுகள் வந்து மனதில் நிரம்பிவிடுகின்றன. காலில் ஒட்டிய மணலைத் தட்டிவிடவும் தோன்றுகிறது.

இந்த பாடல் சுந்தர் அவர்களின் நேயர் விருப்பமாக தந்துள்ளேன். இந்த பதிவு அனைத்துமே அவரின் எழுத்துக்கள் தான். நன்றி சுந்தர்.

ஆஆஆஆஆஆஆ

ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மீதாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்
அந்நாளில் சோழ மன்னர்கள்
ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன்
கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே
தெய்வ பூந்தமிழ் பாயிரம்

ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட
நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன்
தெய்வ லோகமேதானடி
வேறெங்கு சென்ற போதிலும்
இந்த இன்பங்களேதடி

ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி
தென்றல் போல நீ ஆடடி
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி
தெய்வ பாசுரம் பாடடி
ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி

ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி

Get this widget | Share | Track details

1 comment:

Sundar Padmanaban said...

ரொம்ப நன்றி ரவீ.

ஹைத்ராபாத் சந்திப்பு காட்சிகள்